கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நேற்று (04) மாலை ஓடையில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் வீட்டிற்கு அருகில் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஒன்று உள்ளதுடன், கால்வாயில் தண்ணீரில் வீழ்ந்ததாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், தாய் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள ஓடையில் தண்ணீர் இருப்பதைக் கண்ட குழந்தை விளையாட முற்பட்ட வேளையில் ஓடையில் தவறி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கிளிநொச்சி மருதநகரில் வசிக்கும் ஒன்றரை வயதுடைய நிஷாந்தன் சபீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)