இலங்கையில் உள்ள ரஷ்யர்களின் இலங்கை விஜயத்தை உடனடியாக இடைநிறுத்திவிட்டு நாடு திரும்புமாறு ரஷ்யா பணிப்புரை விடுத்துள்ளது. சுற்றுப்பயணத்திற்காக இலங்கை வந்துள்ள சுமார் 300 ரஷ்யர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து காலியாக ரஷ்யாவில் இருந்து
வருகை தந்த விமானம் மூலம் ரஷ்யா நோக்கி புறப்பட்டதாக நமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் இன்று பிற்பகல் இலங்கையிலிருந்து ரஷ்யா செல்லும் கடைசி ஏரோஃப்லொட் விமானத்தில் புறப்பட்டனர். இலங்கையில் இருந்து வெளியேறிய ரஷ்யர்கள், நெருக்கடிகள் இருந்தபோதிலும் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராக இருந்ததாக தெரிவித்தனர்.

நாடு திரும்புவதற்காக விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்யர்கள், எதிர்காலத்தில் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஏரோஃப்லொட் விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)