திக்வெல்ல - வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்த குறித்த இளைஞர் தொடருந்தின் அடியில் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து, மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இளைஞன் மீட்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.