
அண்மையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
எரிசக்தி அமைச்சரின் ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
“ வீரர்கள் பலமுறை தோல்வியடைந்து, ஒரு அணியில் இருந்து நீக்கப்படும்போது, கூட்டங்களுக்கு வந்து புதிய கேப்டனை சங்கடப்படுத்துவதற்குப் பதிலாக வேறு விளையாட்டில் ஈடுபடும் கண்ணியம் அவர்களுக்கு இருக்க வேண்டும்!” என ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
