நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் "யூனிட்-02" பிரிவு பழுது காரணமாக இன்று (17) நள்ளிரவு முதல் 80 நாட்களுக்கு மூடப்பட்டது.
இதன்படி மின்வெட்டு அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெளிவுபடுத்தினார்.
இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதால் மின் உற்பத்தி நிலையம் மூடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் மின் கட்டமைப்பில் சுமார் 45% மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதில் சில நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளின் மூலம் குறைந்த விகிதத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் என்றும் அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது எரிபொருள் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறைந்தபட்சம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை பேண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கண்வன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு நீடிக்கிறது. (யாழ் நியூஸ்)