பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அண்மையில் இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் இன்னும் பொருளாதார மந்தநிலை சீரானபாடில்லை.
தற்போது பாகிஸ்தான் மக்களும், இலங்கை மக்களைப் போல அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். உலகிலேயே அதிக அளவு டீ தூளை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால், ``பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்படி மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொண்டால் அரசுக்கு ஏற்படும் இறக்குமதிச் செலவு குறையும்.
பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு கடன் வாங்கித்தான் டீ தூளை இறக்குமதி செய்கிறது. இதனால் நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.