பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதனால், இந்த சேமிப்புத் தொட்டிகளைத் திறக்குமாறு பொலிஸ் அதிகாரிகளையோ அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையோ கோர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள தாங்கிகளை திறக்குமாறு பொலிஸாரிடம் வரிசையில் நின்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த தாங்கிகளை திறக்க முற்படும் போது நாசகாரர் ஒருவர் ஆபத்தான செயலில் ஈடுபட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ அதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே பொறுப்புக் கூற நேரிடும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தாங்கிகளை திறப்பது பொலிஸாரின் கடமையல்ல எனவும், அதற்கு அதிகாரம் உள்ளவர்கள் மாத்திரமே எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)