ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (09) இரவு 8.00 மணிக்கு முன்னதாக சரணடையுமாறு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவங்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேக நபராக எம்.பி.யை பெயரிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)