பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (06) முதல் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (06) தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனெல்ல, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளில் இன்று 10% முதல் 15% பேருந்துகள் மட்டுமே இயங்கும் என்று அவர் கூறினார்.
மேற்கண்ட பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து டீசல் விநியோகம் செய்யப்படுவதில்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)