பம்பலப்பிட்டியில் தனிநபர் ஒருவருக்கு கேன்களில் எரிபொருளை வழங்கிய எரிபொருள் பவுசருக்கு எதிராக இன்று கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விநியோக்கும் குழுவினர் தவறான நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் CEYPETCO (இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்) மற்றும் LIOC (லங்கா ஐஓசி) ஆகிய மூன்று எரிபொருள் பவுசர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)