தமிழ்நாடு மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு படகு சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தப் படகுச் சேவையின் மூலம் எரிபொருள், உரம், பால் மா, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பலாலி, திருச்சி மற்றும் சென்னை இடையே பயணிகள் விமானங்கள் ஜூலை 1 முதல் இயக்கப்படும் என்று அவர் கூறினார். (யாழ் நியூஸ்)