சவூதி அரேபியா அரசாங்கம் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையிலிருந்து 1585 யாத்ரீகர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
ஹஜ் சுற்றுலா நடத்துவோர் சங்கங்களுடனான சந்திப்பின் போது, அமைச்சர் விக்கிரமநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான கட்டணமாக நியாயமான தொகையை வசூலிக்குமாறு சுற்றுலா நடத்துபவர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹஜ் யாத்திரையின் நோக்கத்திற்காக வெளிநாட்டில் இருந்து 1,500 அமெரிக்க டொலர்களை இலங்கையில் நியமிக்கப்பட்ட அமெரிக்க டொலர் கணக்கிற்கு மாற்றுவது ஒரு முக்கிய தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈடுபட ஆர்வமுள்ள இலங்கையர்கள் 2022 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னர் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)