ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் இருந்து விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா பதவியேற்க உள்ளார்.
தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் அவர் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க பெரேராவும் அண்மையில் பாராளுமன்றத்தில் பிரவேசித்து சக்திவாய்ந்த அமைச்சுப் பதவியை ஏற்பது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)