
ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜனிதா ஏ. லியனகே நேற்று ஊடகமொன்றுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாவது, இலங்கை தரப்பின் உத்தரவாதத்தின் பேரில் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கு விமான அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானம் கொழும்பில் தரையிறக்கப்பட்டதை அடுத்து, குறித்த விமான நிறுவனம் கொழும்புக்கான வணிக விமானங்களை நிறுத்தியது. பின்னர், இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் தலையிட்டு, தடை உத்தரவை நிறுத்தினார்.
நீதிமன்ற வழக்கு முழுமையாக முடியும் வரை விமான நிறுவனம் காத்திருக்கும் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
"விமான நிறுவன அதிகாரிகளை ஒத்துக்கொள்ள வைக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)