உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள பொலிஸார் முயன்றபோது பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.
பொலிஸாருக்கு எரிபொருள் கோட்டா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.
கலவரங்களைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்தல், போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கியக் கடமைகளை நிறைவேற்றும் அத்தியாவசிய சேவையாக பொலிஸார் திகழ்வதாக பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.
இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பொலிஸாருக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார்.