நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எரிபொருள் தீர்ந்து தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்கு எரிபொருள் தேவையா எனக் கேட்டு அவரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் எரிபொருளை விற்பனை செய்த நபரிடம் ரூ. 5000 இனை கொடுத்துவிட்டு மீதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அருகில் உள்ள கடைக்கு விரைந்து சென்றுள்ளார்.
இச்செயலை செய்தவர் ‘பல்லா’ எனப்படும் பிரதேசத்தில் பிரபல மோசடி செய்பவர் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர் என தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)