
கடைசியாக 2014 ஆம் ஆண்டு மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகவும், மின்கட்டணத்திலும் குறைப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நிலக்கரி விலை, எரிபொருள் விலை மற்றும் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை இனி தாங்க முடியாது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அதன் பின்னர் எவ்வாறு மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)