தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் ஒக்டென் 95 வகை பெற்றோல், 3,000 மெட்ரிக் தொன் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளியிடப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அது போதுமானது இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோல் இருப்புக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், லங்கா ஐஓசியிடம் சுமார் 10,000 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதென அறிக்கைகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அடுத்த சில நாட்களுக்கு, தம்வசமுள்ள டீசல் கையிருப்பில் சிலவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்க லங்கா ஐஓசி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
டொலர் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழில்முறையற்ற நிர்வாகமும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு நேரடிக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய நேரத்தில் தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் வேண்டுமென்றே நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.