பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17 ஆவது அதிபராக இன்று (30) பதவியேற்றார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 09ஆம் திகதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார்.
இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் மகன் ஆவார்.
மக்கள் எழுச்சியில் அவரது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை அவரது மகன் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.