மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில், பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (28) முதல் 3 வாரங்களுக்கு, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், பொதுமக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், நாளை முதல் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (www.pucsl.gov.lk) உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.