இலங்கையில் மீண்டும் டெங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல்மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், டெங்கு பரவும் அபாயம் உள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு வரை 26,622 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த 8 நாட்களில் மாத்திரம் 2416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய தொற்று நோய்களுக்கான நிலையத்தின் வைத்தியர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், டெங்குவை ஒழிக்க உதவுமாறும் மருத்துவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். (யாழ் நியூஸ்)