இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் முன்னாள் அணித்தலைவருமான லசித் மலிங்காவை நியமித்துள்ளதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது வெள்ளைப் பந்துப் பிரிவிற்கான தேசிய அணியின் ‘பவுலிங் வியூகப் பயிற்சியாளர்’ ஆக இலங்கை கிரிக்கட் வாரியம் அறிவித்துள்ளது.
இச்சுற்றுப்பயணத்தின் போது, இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பார், தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த லசித் மாலிங்க உதவுவார்.
மலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத் பவுலிங் நிபுணத்துவமும், குறிப்பாக டி20 வடிவத்தில், இந்த முக்கியமான தொடரில் அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புகிறது.
லசித் மலிங்க இந்த ஆண்டு பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவில் வெள்ளை பந்து தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தேசிய அணியுடன் அதே பாத்திரத்தை வகித்தார். (யாழ் நியூஸ்)