தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தம்மிக்க பெரேரா, கிரிக்கெட் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சி ஆகியோரை சனத் குணதிலக மற்றும் அரவிந்த பெரேரா என்றும் குறிப்பிட்டார்.
குறித்த அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
“என்னிடம் மன்னிப்பு கேட்க தம்மிக்க பெரேராவிடமிருந்து இப்போதுதான் அழைப்பு வந்தது. இது வெறும் நாக்கு சறுக்கல், மூளையின் தவறு அல்ல என்று சொன்னேன். முன்னோக்கிச் செல்லும் கடினமான பணிக்கு நான் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்த விடையம் இதனுடன் முடிந்தது என வைத்துக் கொள்வோம்” என்று சனத் ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)