பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட பல சர்வதேச அறிக்கைகள், "குடும்பப் பின்னணி அறிக்கையை" சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத் தேவையால் பெண்களின் உரிமைகளில் தாக்கம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளன.
வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக வெளியேறும் புலம்பெயர் பெண் ஊழியர்களின் பிள்ளைகள் 05 வயதுக்கு குறையாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, சில சந்தர்ப்பங்களில், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் பெண்கள், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், சில அதிகாரிகள் பல்வேறு காரணங்களால் உரிய அறிக்கைகளை தாமதப்படுத்துவதால், அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அறிக்கைகளை சமர்ப்பிக்க தகுதி இல்லாத சில பெண்கள் எந்தவிதமான மேற்பார்வையும் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் வழி மூலம் சென்று பல சிக்கல்களைச் சந்தித்துள்ளனர்.
எனவே, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள உண்மைகளை கருத்திற் கொண்டு குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கட்டாயக் குடும்பப் பின்னணி அறிக்கை சமர்ப்பிப்பிலிருந்து இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெண்களை விடுவிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)