தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பொதுமக்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீர் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 071 9 39 99 99 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அடுத்த 3 மாதங்களுக்கு நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசிகள் கையிருப்பில் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.