கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் நாடு முழுவதும் உள்ள வரிசைகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள மொத்த களஞ்சியங்களில் உள்ள நெல், அரிசி, மரக்கறி, பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்வதற்கான வாகனங்களுக்கு டீசல் இல்லை.
இதன்மூலமாக மற்றுமொரு முறையில் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது, எதிர்காலத்தில் வேறொரு அரசாங்கம் வந்தால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? என அமைச்சர்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்கின்றனர்.
தாங்கள் கூறுவது போன்று எதிர்காலத்தில் வேறொரு அரசாங்கம் வந்தால் இந்த பிரச்சினைகளை குறுகிய காலத்திற்குள் தீர்த்துக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து 15 பேர் கொண்ட அமைச்சரவையை தெரிவு செய்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
அந்த காலப்பகுதியில் குறித்த நாடுகள் உதவுவதாகவும் அதன் பின்னர் தேர்தலின் மூலம் உருவாகும் புதிய அரசாங்கத்திற்கு உதவ முடியும் அவர்கள் கூறினர்.
இவ்வாறான கருத்து சர்வதேச ரீதியில் உள்ளது, தற்போதுள்ள அரசிற்கு தேசிய ரீதியிலான வரவேற்போ அல்லது மக்களின் நம்பிக்கையோ இல்லை என்பதே தற்போதைய பிராதான பிரச்சினையாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.