குறித்த வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
அதற்கமைய, அஜித் நிவாட் கப்ராலை ரூ. 10 மில்லியன் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.
தீனியாவல பாலித தேரரினால் தாக்கச் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான குறித்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இதற்கு முன்னர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, திருத்தப்பட்ட முறைப்பாட்டை தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், திருத்தப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார்.
ஒரு தரப்பு வாதத்தை கருத்தில் எடுத்து, தமது கட்சிக்காரர் மீது வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளமை தொடர்பில், கப்ரால் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெனாண்டோ தமது வாதங்களை முன்வைத்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெரிக்காவின் இமாத் ஷா சுபைரி என்பவருக்கு, இலங்கை அரசுக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், குற்றவியல் சட்டத்தின் கீழ், அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கைக்கு குந்தகம் புரிந்தமை தொடர்பான குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.