ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2018 போட்டியின் போது இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்திருந்தது.
இங்கிலாந்து அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணியில் பட்லரைத் தவிர பில் சால்ட் (122), டேவிட் மலோன் (125) ஆகியோர் சதம் அடித்தனர். (யாழ் நியூஸ்)