இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் மின்சார பொறியியலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையிலேயே தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.