அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் மூலம் சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காட்டி விலையை அதிகரிக்க மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளை தடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் விவசாய உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதியை நேரடியாக கிராமியச் சந்தைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறைவதால் கிராமப்புற நுகர்வோர் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யவும், விவசாயிகள் அதிக விலையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வியாபாரம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)