கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.
எனினும், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாட முன்வந்துள்ளமையே இதற்கான காரணம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக இந்த நாட்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நேரத்தை ஒதுக்கி கொள்கின்றமைக்கு அமைய, நாள் ஒன்றுக்கு 1,500க்கும் அதிகமானவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.