மண்ணெண்ணெய் வாங்குவதற்காக காலையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்த தோட்டத் தொழிலாளர்களும் பிரதேச மக்களும், பின்னர் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்பினர்.
சுமார் 14 நாட்களாக நோர்வூட் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் கையிருப்பு கிடைக்கவில்லை எனவும் தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரித்தால் தாங்கள் மேலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)