சுமார் 3.6 மில்லியன் ரூபாவிற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆல்ட்டோ காரின் விலை தற்போது 3.1 முதல் 3 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதே நேரத்தில், வங்கிகளின் கடன் குறைப்பு மற்றும் குத்தகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களும் மிக அதிகமாக உள்ளன.
மேலும், வாகன பராமரிப்புக்கான உதிரி பாகங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இத்தனை நிபந்தனைகளுடன், கார்களில் தங்களுடைய கடமைகளையும் அன்றாட வேலைகளையும் செய்து வந்த மக்கள் தற்போது பொதுப் போக்குவரத்தின் பக்கம் திரும்புவதும் இன்னொரு காரணம் என கருதப்படுகிறது. (யாழ் நியூஸ்)