எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பல் வெள்ளிக்கிழமை (24) வரவிருந்த போதிலும் கப்பல் வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கப்பல் வந்தடையும் சரியான திகதி இதுவரை குறிப்பிடப்படவில்லை எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கப்பல் தாமதம் மற்றும் வந்தடையும் திகதி குறித்து அண்மைக்காலமாக தாம் வெளியிட்ட அறிக்கைகளுக்கு அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். (யாழ் நியூஸ்)