எரிபொருள் வரிசையில் நின்றவர்களை பொலிசார் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பேருவளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அந்த முடிவு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமலில் இருக்கும். ஆனால் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்த அளவு எரிபொருளை விநியோகித்து வருகிறது. (யாழ் நியூஸ்)