உயிரிழந்தவர் தலவாக்கலை, லிதுல மெராயாவைச் சேர்ந்த நடராஜ் செல்வதுரை (வயது 46) எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் இன்று அதிகாலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து புடலுஓயா நோக்கி பயணித்த தனியார் பஸ், சிக்னல்களை வழங்காமல் சுற்றுவட்டத்தில் வலப்புறம் திரும்பிய போது, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் தலவாக்கே பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)