இச்சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.
இது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
04 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 05ஆம் வீதியில் இயங்கும் பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வீதியில் நின்றிருந்த 55 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் இக்குழந்தையை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டுள்ளார்; இதன்போது அக்குழந்தை கூக்குரலிட்டு அழுதுள்ளது.
இதனை அவதானித்த அவ்வீதியில் நின்றிருந்த பொதுமக்கள் அக்குழந்தையை அவ்வயோதிபரிடமிருந்து காப்பாற்றியதோடு அவ்வயோதிபரை நையப்புடைத்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை மருந்துகள், சிறிஞ், ஊசி மற்றும் பாடசாலை மாணவர்களில் உடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.