கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, மன்னார் காற்றாலை மின் திட்டத்தை குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கையளிக்கும் போது ஜனாதிபதி தம்மை வரவழைத்து அந்த திட்டத்தை கையளிக்குமாறு இந்திய பிரதமர் வற்புறுத்துவதாக தெரிவித்ததாகவும் அது அத்திட்டம் இலங்கை மின்சார சபைக்கு சம்பந்தம் இல்லை எனவும், இது முதலீட்டு சபைக்கே தொடர்புடையதாகவும் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)