எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையவழியாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொழும்பு புறநகர் பகுதிகள், வெளிமாவட்ட நகர எல்லைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்கள் அடுத்த வாரம் மூடுவதா அல்லது இணையத்தில் செயல்படுவதா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராமப்புற பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து தங்கள் செயல்பாடுகளை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)