நாட்டில் 100 அந்நியச் செலாவணி இறக்குமதி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 6 மாத காலத்திற்கு அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் அது பங்கு இல்லாத அமைச்சுப் பதவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)