மேலும் தம்மிக்க பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கும் அவர் தனது ஒப்புதலை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான பாராளுமன்றத்தின் SLPP தேசிய பட்டியல் ஆசனத்தை தம்மிக்க பெரேரா நிரப்புவார் என அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய இரண்டு புதிய அமைச்சுக்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. (யாழ் நியூஸ்)