தாம் முன்னர் கூறியது போன்று எரிபொருளுக்கு மிகவும் கடினமான மூன்று வாரங்கள் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள தேவையில் 50 சதவீதத்திற்கு மாத்திரம் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம், பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகத்தை முன்னுரிமையாக வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளை 7 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் அதன் பின்னர் எரிபொருள் கடன் வசதியை மேலும் நீட்டித்ததன் பின்னர் மேலும் 4 மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
நாளை (16) 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் கப்பல்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)