அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு (Justin Bieber) உடல்நலப் பிரச்சினை காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் கூடிய விரைவில் நடைபெறவிருந்த அவரின் Justice World Tour இசை நிகழ்ச்சிகளை பீபர் ரத்து செய்துள்ளார்.
சிங்கப்பூர் உட்பட சில நாடுகளில் அந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
Justice World Tour தொகுப்பின் முதல் நிகழ்ச்சி கனடாவில் தொடங்குவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
28 வயது பீபர், shingles என்ற ஒருவிதத் தோல் பிரச்சினையால் அவதியுறுகிறார். காதுக்குப் பக்கத்திலுள்ள முக்கிய நரம்பை அது பாதித்ததால் Ramsay Hunt Syndrome எனும் முகத் தசையின் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நிலையை அவர் எதிர்நோக்குகிறார்.
பீபர், அவருடைய Instagram பக்கத்தில் அதுபற்றிக் காணொளிப் பதிவின் மூலம் தெரிவித்தார். அதில் அவரது முகத்தின் ஒரு பக்கம் அசையாமல், உணர்வுகளின்றிக் காணப்பட்டது.
அவரது கண்ணிமைகளில் ஒன்று மூடாமல் இருந்தது. ஒரு கண்ணிமை மட்டும் தனியாகவும் மெதுவாகவும் மூடித் திறந்தது.
அந்நிலையிலிருந்து மீண்டுவர முகப் பயிற்சிகளைச் செய்வதாகவும் ஓய்வெடுப்பதாகவும் அவர் கூறினார். அப்போதுதான் விரைவில் முழுமையாகக் குணமடைந்து, தாம் பிறந்தது எதற்காகவோ அதனைச் செய்யமுடியும் என்று சொன்னார் பீபர்.