இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும், அது வரை பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.