இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் எரிசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சரும் கட்டார் எரிசக்தியின் ஜனாதிபதியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாட் ஷெரிடா அல்-காபியை இன்று சந்தித்ததாக அமைச்சர் காஞ்சன தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (LPG), மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கட்டார் எரிசக்தி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் கூறினார்.
“கத்தார் வளர்ச்சிக்கான நிதியத்தின் துணை இயக்குநர் ஜெனரலைச் சந்தித்தேன். பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி கலந்துரையாடப்பட்டது. மருத்துவப் பொருட்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடன் வசதிக்கான கோரிக்கையை பரிசீலித்து IMF திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது” என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அதிகாலை கட்டார் நோக்கிச் சென்றார். (யாழ் நியூஸ்)