சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்யக்கூடிய விற்பனை நிலையங்களின் பட்டியலை இன்று (03) லிட்ரோ நிறுவனம் மாற்றியுள்ளது.
இன்று (03) சந்தைக்கு 16,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்க முடியும் என்பதால், அந்த எண்ணிக்கை கொழும்பு 01 முதல் 15 பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதனடிப்படையில், ஏனைய பகுதிகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படாது என்பதால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். (யாழ் நியூஸ்)