எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டில் பரவி வரும் வதந்திகளால், திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், புத்தள போன்ற பிரதேசங்களில் பல்வேறு விவசாயிகளிடம், சிலர் ஒரு கிலோ 165 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்தர்கள் இந்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், கௌபி போன்ற தானியங்களை நாட்டில் நிலவும் விலையை விட அதிக விலை கொடுத்து மக்கள் வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. திஸ்ஸமஹாராம மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச மக்கள் தற்போது கிராமங்களில் சுற்றித் திரியும் வெளியாட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)