
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வீரசேகர, பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த போதனைகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபாகரன் மக்களைக் கொல்லும் போது பௌத்த சமூகம் சாதாரண தமிழர்களுக்கு தீங்கு செய்யவில்லை என வீரசேகர கூறினார்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)