
கல்பிட்டி எத்தல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த மோதல் இடம்பெற்றதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய இருவரும் கல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)