ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விமான சேவையை நடத்துவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும், எரிபொருளை உற்பத்தி செய்யும் நாட்டிற்கு வழங்கினால், எளிதாக இயக்க முடியும் என்றும் அரசு கருதுகிறது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ரூ. 31,000 கோடிக்கு மேல் கடன் பாக்கியுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை மேலும் தொடர முடியாத காரணத்தினால் மறுசீரமைக்க அரசு உத்தேசித்துள்ளது.
இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டுமெனவும் இதற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். (யாழ் நியூஸ்)